அசாமில் போதைப்பொருள் பறிமுதல்; 5 பேர் கைது

6 months ago 74

கவுகாத்தி,

அசாமின் ஸ்ரீபூமி மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அண்டை மாநிலத்தில் இருந்து வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 50 ஆயிரம் யாபா என்ற போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன.

மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து அம்மாநில முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு போலீசாரை பாராட்டியுள்ளார்.

Read Entire Article