அசாமில் பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்.17-ல் தொடக்கம்

2 weeks ago 3

கவுகாத்தி,

அசாமில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சியில் முதல்-மந்திரியாக ஹிமந்தா பிஸ்வா சர்மா இருந்து வருகிறார். இந்தநிலையில் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 17 முதல் மார்ச் 25 வரை நடைபெறும் என அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாள் அமர்வு கோக்ரஜாரில் நடைபெற உள்ளது. அசாம் கவர்னர் லஷ்மண் பிரசாத் ஆச்சார்யா தொடக்க உரை ஆற்றுகிறார்.

ஒரு நாள் இடைவெளிக்குப் பிறகு, மீதமுள்ள கூட்டத்தொடர் பிப்ரவரி 19-ம் தேதி முதல் அசாம் சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெறும். 2025-26 நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட்டை நிதி மந்திரி அஜந்தா நியோக் மார்ச் 10ஆம் தேதி தாக்கல் செய்கிறார். கூட்டத்தொடரின்போது பல மசோதாக்கள், அறிக்கைகள் மற்றும் தீர்மானங்கள் தாக்கல் செய்யப்படும் என்று அந்த அதிகாரி கூறியுள்ளார்.

Read Entire Article