இடைப்பாடி, பிப்.22: இடைப்பாடி அருகே தேவூர் பேரூராட்சியில், கடந்த 2022ம் ஆண்டு சங்ககிரி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் ₹13.57லட்சத்தில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு வராமல் இருந்தது. இதனால், வாடகை கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது. எனவேஇ புதிய அங்கன்வாடி மையத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்த செய்தி, கடந்த 20ம் தேதி தினகரன் நாளிதழில் படத்துடன் வெளியானது. இதன் எதிரொலியாக நேற்று அங்கன்வாடி மையம் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. இதையடுத்து வாடகை கட்டிடத்தில் இருந்த 27 குழந்தைகள் புதிய அங்கன்வாடி மையத்திற்கு மாற்றப்பட்டு, செயல்பாட்டிற்கு வந்தது.
The post அங்கன்வாடி மையம் பயன்பாட்டிற்கு திறப்பு appeared first on Dinakaran.