திங்கள்சந்தை, அக். 16: நெய்யூர் பேரூராட்சி கண்ணோடு என்ற இடத்தில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்ட விஜய்வசந்த் எம்பியிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்று பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாடு திட்டம் 2023-24ன் கீழ் ரூ. 11 லட்சத்து 80 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து புதிய அங்கன்வாடி கட்டிட பணிகள் நடந்து வந்த நிலையில் பணிகள் முடிவடைந்து திறப்பு விழா நடந்தது.
விழாவிற்கு நெய்யூர் பேரூராட்சி தலைவி பிரதீபா தலைமை வகித்தார். துணைத் தலைவர் பென் டேவிட், 1-வது வார்டு கவுன்சிலர் ஹரிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண்ணோடு பங்குத்தந்தை அருட்பணி ரஞ்சித் அர்ச்சித்து ஜெபம் செய்தார். விஜய்வசந்த் எம்பி அங்கன்வாடி கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். முன்னதாக கண்ணோடு வந்த விஜய்வசந்த் எம்பிக்கு பூங்கொத்து கொடுத்து மேள தாளம் முழங்க அப்பகுதி மக்கள் வரவேற்பு அளித்தனர்.
The post அங்கன்வாடி கட்டிடம் திறப்பு appeared first on Dinakaran.