விருதுநகர், ஏப்.4: 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பாக அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் தமிழரசி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் வருவாய் கிராம உதவியாளர்களுக்கு வழங்குவது போல் அடிப்படை ஊதியம் ரூ.11,100 வழங்க வேண்டும்.
குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.6,750 வழங்க வேண்டும். ஆண்டுக்கு 12 நாள் தற்செயல் விடுப்பு, 12 மாத கால மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். கூடுதல் பணிப்பொறுப்பு மேற்கொள்ளும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு சத்துணவு அமைப்பாளர்களுக்கு வழங்குவது போல் கூடுதல் பொறுப்புப்படி மாதம் ரூ.ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
The post அங்கன்வாடி ஊழியர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.