அக்னிவீர் திட்டம் குறித்து தவறான தகவல்களை ராகுல் தெரிவித்து வருகிறார்: அமித் ஷா

3 months ago 29
பொய்களின் உற்பத்திக்கூடமாக ராகுல் காந்தி விளங்குவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடுமையாக விமர்சித்தார். ஹரியானாவில் மகேந்திரகரில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், அக்னிவீர் திட்டம் குறித்து தவறான தகவல்களை ராகுல் காந்தி தெரிவித்து வருவதாகத் தெரிவித்தார். அக்னிவீர் திட்டத்தால் ஹரியானா மாநில இளைஞர்களுக்கு வேலை கிடைக்காமல் போய்விடும் என்று ராகுல் காந்தி பொய் சொல்வதாகவும், அதை யாரும் நம்ப வேண்டாம் என்றும் அமித் ஷா தெரிவித்தார். நம்முடைய ராணுவத்தை இளமையாக வைத்திருக்க அக்னிவீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக அமித் ஷா தெரிவித்தார். 
Read Entire Article