அக்டோபர் 14-ல் B.Ed கலந்தாய்வு தொடக்கம்

3 months ago 17

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட் படிப்பில் 2,040 இடங்கள் உள்ளன. நடப்புக் கல்வி ஆண்டில் (2024-25) மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி தொடங்கி 26ஆம் தேதி முடிவடைந்தது. மொத்தம் 2,187 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், கல்லூரிக் கல்வி இயக்ககம் ஏற்கெனவே அறிவித்திருந்தபடி பி.எட். படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து, விரும்பும் கல்லூரியைத் தேர்வுசெய்வதற்கான கலந்தாய்வு அக்டோபர் 14ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி முடிவடைகிறது. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பு அக்டோபர் 23ஆம் தேதி தொடங்கவுள்ளது.

The post அக்டோபர் 14-ல் B.Ed கலந்தாய்வு தொடக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article