மாட்டு சாணத்தில் மட்டும் திருநீறு தயாரித்து வழங்கக் கோரி மாட்டுச்சாண வரட்டி மாலை அணிந்து சிவனடியார்கள் ஊர்வலம்

12 hours ago 1

புதுச்சேரி : மாட்டு சாணத்தில் மட்டும் நல்ல திருநீறு தயாரித்து வழங்கக் கோரி புதுச்சேரியில் சிவனடியார்கள் அணிதிரண்டு ஊர்வலம் நடத்தினர். மாட்டுச்சாணத்தில் மட்டுமே உலகம் முழுக்க திருநீறு தயாரிக்க வேண்டும். சுண்ணாம்பு, மரத்தூள், பேப்பர் வேஸ்ட், விறகு சாம்பல், மண் அரவை போன்றவற்றால் திருநீறு செய்யக்கூடாது. இதனால் நெற்றிக்கு பெரிய பாதிப்பு ஏற்படும்.

எனவே மாட்டு சாணம் மூலம் மட்டுமே திருநீறு தயாரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சிவனடியார்கள் நேற்று மாட்டுச்சாண வரட்டி மாலை அணிந்து ஊர்வலம் சென்றனர்.
இதில் ஏராளமான சிவனடியார்கள் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி காந்தி வீதி வேதபுரீஸ்வரர் கோயில் அருகில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலம் பல்வேறு சாலைகள் வழியாக வில்லியனூர் சிவன் கோயிலை சென்றடைந்தது. சிவனடியார் திருக்கூட்டம், சுபகான பூதகண நாதர் இசைக்குழு இணைந்து இந்த ஊர்வலத்தை நடத்தினர். இதில் இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் மஞ்சினி மற்றும் சிவனடியார்கள் பலரும் கலந்து கொண்டனர்.

The post மாட்டு சாணத்தில் மட்டும் திருநீறு தயாரித்து வழங்கக் கோரி மாட்டுச்சாண வரட்டி மாலை அணிந்து சிவனடியார்கள் ஊர்வலம் appeared first on Dinakaran.

Read Entire Article