அக்சய் குமார் நடித்துள்ள 'ஸ்கை போர்ஸ்' படத்தின் டிரெய்லர் அப்டேட்

2 days ago 1

சென்னை,

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அக்சய் குமார். சமீபத்தில் இவரின் நடிப்பில் "ஓஎம்ஜி -2, சர்பிரா, கேல் கேல் மெய்ன் மற்றும் சிங்கம் அகெய்ன்" ஆகிய திரைப்படங்கள் வெளியாகின. இந்த படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

இதற்கிடையில், பிஷேக் அனில் கபூர் மற்றும் சந்தீப் கெவ்லானி ஆகியோரால் இயக்கப்பட்ட 'ஸ்கே போர்ஸ்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் நிம்ரத் கவுர் , சாரா அலி கான் மற்றும் வீர் பஹாரியா ஆகியோர் அக்சய் குமாருடன் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தை மடாக் பிலிம்ஸ் மற்றும் ஜியோ ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ளன. இந்தியாவின் முதல் மற்றும் மிகக் கொடிய வான்வழித் தாக்குதலை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகி உள்ளது.

இந்த திரைப்படம் வருகிற 24-ந் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு உலக அளவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இப்படத்தின் டிரெய்லர் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி நாளை இப்படத்தின் டிரெய்லர் வெளியாக உள்ளது.

This New Year, soar into the skies with #SkyForce ✈️ – the untold story of India's first and deadliest airstrike ever.Trailer out tomorrow. In cinemas on 24th January 2025.@akshaykumar #VeerPahariya @SaraAliKhan @NimratOfficial #SharadKelkar #DineshVijan #JyotiDeshpandepic.twitter.com/ezabSQdIFg

— Saregama (@saregamaglobal) January 4, 2025
Read Entire Article