அகமதாபாத்தில் இரும்பு பாலம் சரிந்து விபத்து; 40-க்கும் மேற்பட்ட ரயில் சேவை பாதிப்பு!

1 day ago 2

அகமதாபாத்: அகமதாபாத்தில் இரும்பு பாலம் சரிந்து விபத்துக்குள்ளானதில் சென்னை உள்பட 40-க்கும் மேற்பட்ட ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் குறைந்தது 25 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன, மேலும் 15 ரயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்பட்டன. அகமதாபாத் அருகே உள்ள புல்லட் ரயில் திட்ட இடத்தில் கட்டுமானப் பணிகள் நடை பெற்றுக் கொண்டிருந்தது. பணிக்காகப் பயன்படுத்தப்பட்ட ஒரு பிரிவு இரும்பு பாலத்தை அமைக்க கிரேன் உதவியுடன் கட்டிக் கொண்டிருந்தனர்.

அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக அதன் நிலையிலிருந்து சறுக்கி அருகிலுள்ள ரயில் பாதையை பாதித்தது, இந்த சம்பவத்தால் வத்வா மற்றும் அகமதாபாத் நிலையங்களுக்கு இடையிலான கீழ் பாதையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் குறைந்தது 25 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், 15 ரயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்பட்டன. ஐந்து ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டன.

ஆறு ரயில்கள் திருப்பி விடப்பட்டன என்று அகமதாபாத் ரயில்வே பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த விபத்து அருகிலுள்ள ரயில் பாதையை பாதித்துள்ளது. காவல்துறை மற்றும் தீயணைப்பு சேவை அதிகாரிகளுடன் சேர்ந்து நிலைமையைக் கண்காணித்து வருகின்றனர். எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. கட்டப்பட்ட கட்டமைப்பிற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. தண்டவாளத்தை சரி செய்யும் பணியில் ரயில்வே அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

 

The post அகமதாபாத்தில் இரும்பு பாலம் சரிந்து விபத்து; 40-க்கும் மேற்பட்ட ரயில் சேவை பாதிப்பு! appeared first on Dinakaran.

Read Entire Article