அ.தி.மு.க.வை பலப்படுத்த நிறைய செய்யவேண்டியது உள்ளது - சசிகலா

3 months ago 20

சென்னை,

சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் சசிகலா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் எதையும் சரியாக செய்யவில்லை. மழைக்காலம் இப்போதுதான் ஆரம்பிக்கப்போகிறது. அதற்குள் சிறு மழைக்கே சென்னை தாங்கவில்லை. கால்வாய்களை தூர்வாரியிருந்தால் மழை நீர் வடிந்திருக்கும். அ.தி.மு.க.வை பொறுத்தமட்டில் மக்களுக்கு பணியாற்றும் இயக்கம். அதை தான் தொடர்ந்து செய்யவேண்டும் என்பது என்னுடைய விருப்பம்.

2026-ல் ஜெயலலிதா ஆட்சியை நிச்சயம் கொண்டு வருவோம். அது மக்களாட்சியாக இருக்கும். சென்னையில் மழை தேங்காதவாறு கட்டமைப்பை வலுப்படுத்தவேண்டும். தி.மு.க. ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறது. அவர்களை நம்பி மக்கள் வாக்களித்திருக்கிறார்கள்.

கருணாநிதி நூற்றாண்டு விழாவுக்கு வீண் செலவு செய்கிறார்கள். ஆனால் அவசர தேவைக்குரியதை செய்வதில்லை. 2026 சட்டசபை தேர்தலுக்கு அ.தி.மு.க.வை பலப்படுத்த நிறைய செய்யவேண்டியது உள்ளது. தற்போது அது (கட்சி) சரியாக இல்லை. அதை சரிப்படுத்தி எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கொடுத்த மக்களாட்சியை மலரச்செய்வோம். அதற்காக எனது பங்களிப்பு என்ன என்பதை நிச்சயமாக பொறுத்திருந்து பாருங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article