அ.தி.மு.க. - த.வெ.க. கூட்டணி அமையுமா? - நத்தம் விஸ்வநாதன் பதில்

2 hours ago 2

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற உறுப்பினரும், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சருமான நத்தம் விஸ்வநாதன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக வெற்றிக் கழகம் இதுவரை களத்தில் இறங்கி வரவில்லை, கருத்து கூற ஒன்றுமில்லை. விஜய் இன்னும் அவருடைய செல்வாக்கை நிரூபிக்கவில்லை. செல்வாக்கை நிரூபிக்காமல் எதுவும் சொல்ல முடியாது. அவரைப் பற்றி கருத்து சொல்வதற்கு செய்திகள் இல்லை. தேர்தலை சந்தித்து இருந்தால் கருத்து கூறலாம்.

விஜய் வெற்றி பெறலாம், வெற்றி பெறாமலும் போகலாம். அவரைப் பற்றி கருத்து சொல்வதற்கு அபிப்பிராயம் இல்லை. தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமையலாம், அமையாமலும் போகலாம். கூட்டணி அமைப்பது குறித்து தேர்தல் நேரத்தில்தான் முடிவு செய்ய முடியும்.

தி.மு.க.வும், ஊழலும் கூட பிறந்தது. தி.மு.க. என்றாலே ஊழல் என்று அர்த்தம். இரண்டையும் தனித்தனியாக பிரித்து பார்க்க முடியாது. தி.மு.க. அரசிற்கு எதிராகத்தான் மக்கள் வாக்களிப்பார்கள். இன்று கெஜ்ரிவாலுக்கு ஏற்பட்ட கதிதான் நாளை தி.மு.க.வுக்கும் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article