சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள் இவைதான் - ஆச்சரியமளிக்கும் வகையில் கணித்த அக்தர்

3 hours ago 1

லாகூர்,

8 அணிகள் இடையிலான 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் வருகிற 19-ந் தேதி தொடங்கி மார்ச் 9-ந் தேதி வரை நடக்கிறது. இதில் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் அரங்கேறுகிறது.

கிரிக்கெட் ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கி இருக்கும் இந்த தொடரின் அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள் குறித்து பல முன்னாள் வீரர்கள் தங்களது கணிப்பினை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் பாகிஸ்தான் முன்னாள் வீரரான சோயப் அக்தர் அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்புள்ள 3 அணிகள் குறித்து (4-ல் ஒரு அணியை அவர் தேர்வு செய்யவில்லை) தனது கணிப்பினை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, "ஒருவேளை ஆப்கானிஸ்தான் அணி இந்த தொடரில் முதிர்ச்சி தன்மையை காட்டினால் அவர்கள் அரையிறுதிக்கு வருவார்கள். 2025 சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான், இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு வரும் என்று நான் நம்புகிறேன்.

அதே போல இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்தும் என்று நம்புகிறேன். சொல்லப்போனால் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் இறுதிப்போட்டியில் மீண்டும் சந்திக்கும் என்று நான் நம்புகிறேன்" என கூறினார்.

Read Entire Article