ஃபார்மில் இல்லாத கோஹ்லி: 14,000 ரன்கனை கடப்பாரா?

3 months ago 10

சமீப காலமாக இந்திய கிரிக்கெட் அணி முன்னணி வீரர்களான கேப்டன் ரோகித் சர்மாவும், விராட் கோஹ்லியும் ரன் அடிக்க முடியாமல் திணறுவதை கண்டு மனம் நோகாத இந்திய ரசிகர்கள் இல்லை. இருப்பினும் கட்டாக்கில் நடந்த 2வது ஒரு நாள் போட்டியில் 90 பந்துகளில் 119 ரன் குவித்து ஃபார்முக்கு திரும்பி விட்டதாக கேப்டன் ரோகித் தன் பேட்டிங் மூலம் அறிவித்தார். அதே போட்டியில் கோஹ்லி வெறும் 5 ரன்களுக்கு அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.  குறுகிய காலத்தில் 13,000 ரன்களை கடந்துள்ள கோஹ்லிக்கு 14,000 ரன்களை எட்ட இன்னும் 89 ரன்கள் மட்டுமே தேவை.

தற்போது வரை, ஒரு நாள் போட்டிகளில் 284 இன்னிங்ஸ்கள் ஆடி 13,911 ரன் எடுத்துள்ள அவர் கடந்த சில மாதங்களில் நடந்த பல போட்டிகளில் சொற்ப ரன்களில் வீழ்ந்து 14,000 ரன் மைல் கல்லை எட்ட முடியாமல் தவித்து வருகிறார். இந்நிலையில் இன்று நடக்கும் போட்டியில் அந்த சாதனையை கோஹ்லி நிகழ்த்துவார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர், 452 இன்னிங்ஸ்களில் 18,426 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். இலங்கையின் சங்கக்கரா 380 இன்னிங்ஸ்களில் 14,234 ரன்களுடன் 2ம் இடத்தில் உள்ளார்.

கோஹ்லி, கடந்த 2024, நவ.22ல் ஆஸியுடன் துவங்கிய முதல் டெஸ்டில் முதல் இன்னிங்சில் 100, 2வது இன்னிங்சில் 5 ரன் எடுத்தார். அதன் பின், டிசம்பரில் நடந்த 4 டெஸ்ட்களில், 7 இன்னிங்ஸ்களில் ஆடி முறையே, 7, 11, 3, 36, 5, 17, 6 ரன்கள் எடுத்தார்.

The post ஃபார்மில் இல்லாத கோஹ்லி: 14,000 ரன்கனை கடப்பாரா? appeared first on Dinakaran.

Read Entire Article