U19 ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி: தொடர்ந்து 2வது முறையாக சாம்பியனானது வங்கதேச அணி!

4 months ago 14

19 வயதுக்குட்பட்டோருக்கான 11-வது ஜூனியர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இன்று துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா – வங்கதேச அணிகள் மோதின.

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி 49.1 ஓவர்களில் 198 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில், யுதாஜித் குஹா, சேத்தன் சர்மா, ஹர்திக் ராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியை, வங்கதேச பவுலர்கள் 139 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று கோப்பையை தட்டிச்சென்றனர். வங்கதேச அணியில் அஜிசுல் ஹகிம் தமிம், எம்டி இக்பால் ஹசன் இமான் தலா 3 விக்கெட்டுகளும் அல் ஃபஹத் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

இது வங்கதேசத்துக்கு இரண்டாவது ஆசியக்கோப்பை வெற்றியாகும், கடந்த 2023-ம் ஆண்டு யு19 ஆசியக்கோப்பை வென்றிருந்த வங்கதேச அணி தொடர்ச்சியாக 2வது முறையாக 2024 யு19 ஆசியக்கோப்பையும் வென்று அசத்தியுள்ளது.

The post U19 ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி: தொடர்ந்து 2வது முறையாக சாம்பியனானது வங்கதேச அணி! appeared first on Dinakaran.

Read Entire Article