என்னதான் ஆண் பெண் சரிசமம் என பேசினாலும் ஒரு சில விஷயங்களில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் நிறைய விஷயங்களில் வித்தியாசங்கள் இருக்கத்தான் செய்யும் அவற்றில் ஒன்றுதான் உடை களில் இந்த நெக் லைன். அதாவது கழுத்து டிசைன்கள். ஆண்களைப் பொறுத்தவரை அதிகபட்சம் வட்டம், வி நெக் , சில நேரங்களில் ப கழுத்து டிசைன் என அணிந்து கொள்வார்கள். அதிலும் இந்த ஸ்வீட் ஹார்ட் நெக் லைன் பொருத்தவரை பிரத்தியேகமாக பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்குமான நெக் லைனாகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றன’ இதன் வரலாறு மற்றும் ஃபேஷன் விவரங்கள் குறித்து விளக்கமாக பேசினார் நந்தா ( ஃபேஷன் ஆய்வாளர் மற்றும் காஸ்ட்யூம் டிசைனர்)
விக்டோரியன் காலத்தில் துவங்கிய இந்த ஸ்வீட் ஹார்ட் நெக் லைன் ராயல் பெண்களின் கவுன்கள் அவர்களது தோள்பட்டை, கழுத்து எலும்பு, மேல் மார்பகப் பகுதி இவற்றின் அழகை ஹைலைட் செய்து காண்பிப்பதற்காகவே இந்த ஸ்வீட் ஹார்ட் நெக் டிசைன்கள் பயன்படுத்தப்பட்டன. விக்டோரியன் காலத்திற்கும் முன்பு எகிப்திய வரலாற்றில் பெண்கள் ஆரம்பத்தில் மார்பகங்களை மறைக்கும் கச்சைத் துணிகள்தான் கட்டுவார்கள். தொடர்ந்து அவையே சரியாக மார்பகங்களுக்கு நடுவில் ஒரு பள்ளம் கொடுக்கும் படி துணிகளையே ஒரு சிறு வளைவு கொடுத்து கைகளில் தைக்கத் துவங்கினர். அப்படியே அது மறுவி கவுன்கள் ஆகவும் மேலே உடுத்தப்பட்ட அங்கிகளாக பயன்படுத்தும் பொழுதும் கழுத்துகளில் இந்த ஸ்வீட் ஹார்ட் அல்லது சரியாக மார்பகங்களை நோக்கிய கூர்மையான வடிவ டிசைன்களை பெண்கள் அதிகம் பயன்படுத்தினார். ஐரோப்பிய ராயல் பெண்களின் கவுன்களின் அழகை ஹைலைட் செய்வதற்காக இந்த ஸ்வீட் ஹார்ட் நெக் லைன் பயன்படுத்த பட துவங்கி இன்று ஒவ்வொரு பெண்ணிடமும் குறைந்தது 30 உடைகள் இருக்கின்றன எனில் அவற்றில் 25 உடைகள் ஆவது இந்த ஸ்வீட் ஹார்ட் நெக் லைன் வடிவத்தில் தான் , ஆசியா நாடுகளில் தான் கலாச்சாரம் சார்ந்த உடைகள் உடுத்தும் வழக்கம் அதிகம் என்பதால் இந்த நெக்லைன்கள் இங்கே பிரபலம். அதிலும் இந்திய கலாச்சாரத்தில் இந்த ஸ்வீட் ஹார்ட் நெக் லைன்களுக்கு அதீத முக்கியத்துவம் உண்டு’ என்னும் நந்தா யார் எப்படி எந்தெந்த உடைகளில் இந்த கழுத்து டிசைனை பயன்படுத்தலாம் என மேலும் தொடர்ந்தார்.
‘பெண்களை பெண்களாக கொண்டாட எத்தனையோ ஃபேஷன்கள், காஸ்மெட்டிக்ஸ் இருக்கும் பட்சத்தில். மிக எளிமையாக பெண்களை பெண்களாக காட்டும் திறன் கொண்டவை இந்த ஸ்வீட் ஹார்ட் நெக் லைன்கள். ஆண்களுடன் ஒப்பிடுகையில் அடிப்படையிலேயே பெண்களின் கழுத்து , கழுத்து எலும்பு, காலர் எலும்பு, தோள்பட்டைகள் என ஒரு மெல்லிய அழகியல் இருக்கும். அந்த அழகுக்கு மேற்கொண்டு அழகு சேர்க்கும் ஃபேஷன் ஸ்டைல் தான் இந்த ஸ்வீட் ஹார்ட் நெக் டிசைன். ஒல்லி, பப்லி என யாரும் இந்த நெக்லைனை பயன்படுத்தலாம். அதிலும் கொஞ்சம் பப்லியாக இருக்கும் பெண்கள் இந்த ஸ்வீட் ஹார்ட் நெக் லைன் பயன்படுத்தும் பொழுது கழுத்து எலும்புகள் சற்று தூக்கலாக தெரிய உடல் எடை சற்று குறைவாக காட்டும். பொதுவாக கழுத்தை மூடி போட் நெக் அல்லது காலர் நெக் டிசைன்களை விட இப்படியான ஸ்வீட் ஹார்ட் மற்றும் அருங்கோண வடிவ கழுத்து டிசைன்கள் பருமனான பெண்களுக்கு மேற்கொண்டு அழகை தூக்கிக் கொடுக்கும். தொடர்ந்து இந்த ஸ்வீட் ஹார்ட் நெக் லைன் மாடலிங் உலகம், சினிமா உலகம் என அடுத்தடுத்து பல கட்டங்களுக்கு முன்னேறி இன்று இந்த கழுத்து டிசைன்களிலேயே கிளை டிசைன்கள் நிறைய உருவாகிவிட்டன’ ஸ்வீட் ஹார்ட் நெக் லைனில் இன்னும் என்னென்ன வகைகள் உள்ளன மேலும் தொடர்ந்தார் நந்தா.
‘இதில் மொத்தம் ஐந்து வகைகள் உள்ளன. கிளாசிக், ஏசிமிட்ரிக், டீப் நெக், செமி , தலைகீழ் . கிளாசிக் வகை டிசைன்களில் இதய வடிவத்தில் கீழ் குறுகிய பகுதி சரியாக மார்புக்கு மேல் பகுதியில் வந்து முடியும். இவைகள் பொதுவான ரெடிமேட் நெக் லைன் ஸ்டைல். ஏசிமெட்ரிக் வகை இதய வடிவத்தையே கழுத்தின் எந்தப் பகுதியிலும் வரும்படி அமைத்துக் கொள்வது அல்லது ஒன் சைடு ஷோல்டர் உடைகள் கோல்ட் சோல்டர் உள்ளிட்ட மாடல்களில் பயன்படுத்தும் ரகம். அடுத்து செமி ஸ்வீட் ஹார்ட் நெக் டிசைன் இதய வடிவத்தில் கீழ் கூர்மையான பகுதி குறுகி முடியாமல் சற்றே வளைவுடன் முடிந்து விடும் வகை தான் செமி ஸ்வீட் ஹார்ட் நெக் லைன். இவை பெரும்பாலும் டியூப் டாப், டான்க் டாப், உள்ளிட்டவற்றில் பயன்படுத்தும் நெக்லைன். இவை மார்பில் வளைவுகளை ஹைலைட் செய்யும். அடுத்து டீப் ஸ்வீட் ஹார்ட் நெக் டிசைன். மாடலிங் மற்றும் சினிமா உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் நெக் டிசைன்.
கழுத்து முதல் வயிறு பகுதி வரையிலும் கூட இந்த நெக்லைன் அழகாக டிசைன் செய்யப்படுவதுண்டு. அதாவது இதய வடிவத்தில் குறுகிய பகுதி நீண்டு வயிற்றின் நடுப்பகுதி வரையிலும் கூட செல்லும்படி உடைகள் இதில் டிசைன் செய்வது உண்டு. இவைகள் பெரும்பாலும் கவுன்கள், பார்ட்டி உடைகள், ஃபேஷன் நிகழ்வுகளுக்கான இவற்றில் அதிகம் பயன்படுத்துவதுண்டு, இதய வடிவத்தையே அப்படியே தலைகீழாக திருப்பிப் போட்டால் எப்படி இதயத்தின் மேல் பக்கம் வரும் இரண்டு அகலமான பகுதிகள் மேல் பக்கம் வருமோ அந்த வகையில் பயன்படுத்தும் வகை இவை. தலைகீழ் நெக் லைன், இவையும் மார்பு பகுதியின் அழகை ஹைலைட் செய்வதற்காக பயன்படுத்தப்படும் கழுத்து டிசைன். இவையும் பெரும்பாலும் மாடலிங் உலகிலும் மற்றும் சினிமா உலகிலும் அதிகம் பயன்படுத்தப்படுவதுண்டு. அரிதாக ரெடிமேட் உடைகளில் பார்க்கலாம் ‘ இந்திய பெண்கள் உடை களில் இந்த ஸ்வீட் ஹார்ட் நெக் லைனில் பங்கு என்ன விளக்கினார் நந்தா.
‘நம்மூரில் லெகங்கா, சல்வார், புடவை காண பிளவுஸ், கவுன்கள், பட்டுப்பாவாடை சட்டைகள், டாப், குர்தா, குர்தி, என அத்தனை வெரைட்டிகளிலும் இந்த ஸ்வீட் ஹார்ட் நெக் லைன் மிக முக்கியத்துவம் வாய்ந்து விளங்குகின்றன. பெண்களை பெண்களாக காட்டும் டிசைன் என்பதால் நம்மூரின் ட்ரெடிஷனல் உடைகள் அத்தனையிலும் இந்த ஸ்வீட் ஹார்ட் நெய் லைன் நீக்கமற நிறைந்திருப்பதை பார்க்கலாம். யாரும் எப்படியும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
– ஷாலினி நியூட்டன்
The post Sweet Heart நெக் லைன்! appeared first on Dinakaran.