“கன்னடம், ஆங்கிலத்தில் பேச மறுத்து மக்களை அலட்சியப்படுத்திய SBI வங்கி மேலாளரின் செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இத்தகைய சம்பவங்கள் இனி நடக்கக் கூடாது. வங்கி ஊழியர்கள் அனைவரும் மக்களை கண்ணியத்துடன் அணுக வேண்டும், மாநில மொழியில் பேச முயற்சிக்க வேண்டும். வங்கி ஊழியர்களுக்கு மாநில கலாசார, மொழியை மதிப்பதற்கான விழிப்புணர்வு வகுப்புகளை ஒன்றிய நிதியமைச்சகம் நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
The post SBI வங்கி மேலாளருக்கு கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா கடும் கண்டனம் appeared first on Dinakaran.