PAK-ஐ தவிர்க்கும் இனிப்பகங்கள்.. மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ..!

6 hours ago 3

ஜெய்ப்பூர்: உலக புகழ் பெற்ற மைசூர் பாகின் பெயரை, ராஜஸ்தானின் இனிப்புக்கடைகள் பெயர் மாற்றம் செய்துள்ளது. காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 சுற்றுலா பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதற்கு பதிலடி தரும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் ஏவுகணை, டிரோன்கள் மூலம் பாகிஸ்தானில் இருந்த 9 தீவிரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதில் சுமார் 80 தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஆதரவு அளிக்கும் விதமாக மைசூர் பாக், மோத்தி பாக், ஆம் பாக், கோந்த் பாக் போன்ற இனிப்புகளின் பெயர்கள் மைசூர் ஸ்ரீ, மோத்தி ஸ்ரீ, ஆம் ஸ்ரீ, கோந்த் ஸ்ரீ என ராஜஸ்தானில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ‘பாக்’ என்ற வார்த்தையே தங்களுக்கு அசௌகரியத்தை தருவதாக வாடிக்கையாளர்கள் கூறியதால் பெயரை இவ்வாறு மாற்றியுள்ளதாக ராஜஸ்தானின் த்யோஹார் ஸ்வீட்ஸின் உரிமையாளர் அஞ்சலி ஜெயின் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

The post PAK-ஐ தவிர்க்கும் இனிப்பகங்கள்.. மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ..! appeared first on Dinakaran.

Read Entire Article