NO ENTRY வழியே சென்ற காரை தடுத்த காவலாளி; சரமாரியாக தாக்கிய 2 பெண்கள் உள்பட நால்வர் மீது வழக்குப்பதிவு!

3 weeks ago 4

சென்னை: மாமல்லபுரத்தில் NO ENTRY வழியே சென்ற காரை தடுத்த காவலாளியை சரமாரியாக தாக்கிய 2 பெண்கள் உள்ளிட்ட நால்வர் மீது 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வீடியோ ஆதாரங்களை வைத்து அவர்கள் யாரென கண்டறிந்து கைது செய்வதற்கான நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்துக்கு ஞாயிற்றுகிழமை (20.10.2024) நேற்று முன்தினம் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர்.

இந்நிலையில், ஐந்துரதம் புராதன சின்னம் அருகில் 2 பெண்கள் உள்பட 4 பேர் கொண்ட குடும்பத்தினர் காரில் வந்துள்ளனர். அவர்கள் அங்கு நோ பார்க்கிங் வழியாக காரை பார்க் செய்ய முயன்றனர். இதனால், அங்கு பணியிலிருந்த காவலாளி ஏழுமலை என்பவர், காரை அருகில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்துமாறும் மற்றும் NO ENTRY வழியாக கார் செல்லக்கூடாது எனக்கூறி காரை வழி மறித்து நின்றுள்ளார். ஆனால், காரிலிருந்த நபர்கள் தனியார் காவலரை இடிப்பது போன்று சென்று NO ENTRY வழியா செல்ல முயன்றனர்.

இதனால், காரில் வந்தவர்களை நோக்கி வாகன நிறுத்துமிட பணியாளர் ஏழுமலை திட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, காரிலிருந்து இறங்கிய 2 பெண்கள் தகாத வார்த்தைகளால் திட்டுகிறாயா எனக்கூறி ஆவேசமடைந்து, சாலையின் நடுவே ஏழுமலையை சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். மேலும், காரில் உடன் வந்த 2 ஆண்களும் அவர்களுடன் சேர்ந்து காவலாளியை கடுமையாக தாக்கியுள்ளனர். காவலாளியிடமிருந்த பிளாஸ்டிக் பைப்பை பிடுங்கி, அந்த பைப் உடையும் வரை 4 பேரும் ஒன்று சேர்ந்து அவரை தாக்கியுள்ளனர்.

மேலும் அவரது சட்டையை கிழித்து மோசமாக நடந்துகொண்டனர். இந்த வீடியோ சமுக வலைதளத்தில் வைரலாக பரவி வந்த நிலையில், காவலாளியை தாக்கிய 2 பெண்கள் உள்பட நால்வர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். வீடியோ ஆதாரங்களை வைத்து அவர்கள் யாரென கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

 

The post NO ENTRY வழியே சென்ற காரை தடுத்த காவலாளி; சரமாரியாக தாக்கிய 2 பெண்கள் உள்பட நால்வர் மீது வழக்குப்பதிவு! appeared first on Dinakaran.

Read Entire Article