விருதுநகர்: விருதுநகரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாகன பேரணி நடைபெற்றது. விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதல்படி சாலைப்பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு தலைக்கவச முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் இருசக்கர வாகன பேரணி துவங்கியது. கூடுதல் மாவட்ட நீதிபதி ஹேமானந்தக்குமார் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார்.
இருசக்கர வாகன பேரணியில் தலைக்கவசத்தின் முக்கியத்துவம் உணர்த்தும் வகையில் வழக்கறிஞர்கள், போலீசார் தலைக்கவசம் அணிந்து சென்றனர். நிகழ்ச்சியில் வட்ட சட்டப் பணிகள் குழு தலைவர் சார்பு நீதிபதி ராஜகுமார், குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் பாலமுருகன், அய்யப்பன் கலந்து கொண்டனர். வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் திரளாக பங்கேற்றனர்.
The post விழிப்புணர்வு வாகன பேரணி appeared first on Dinakaran.