விருதுநகர்: மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த தூய்மை தொழிலாளி விஷ பவுடரை குடித்து தற்கொலை செய்து கொண்டார். விருதுநகர் விஎம்சி காலனியை சேர்ந்தவர் மாரிமுத்து(40). நகராட்சி தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். காதலித்து திருமணம் செய்து இரு குழந்தைகள் உள்ளனர். இவர் மது குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்தார்.
இதனால் மனைவி பஞ்சர்வர்ணம் குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட மாரிமுத்து நேற்று முன்தினம் மாவட்ட நூலகம் எதிரில் விஷ பவுடரை குடித்து தற்கொலை செய்தார். மேற்கு போலீசில் மனைவி பஞ்சவர்ணம் புகாரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
The post மனைவி பிரிவால் கணவர் தற்கொலை appeared first on Dinakaran.