சென்னை: நாடு முழுவதும் கொண்டாட்டத்துடன் புத்தாண்டை மக்கள் வரவேற்றனர். தமிழகத்தில் சென்னை உட்பட பல நகரங்களில் வானவேடிக்கையுடன் மக்கள் புதிய ஆண்டை வரவேற்றனர். சென்னையில் மெரினா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒவ்வொரு வருடமும் உலகம் முழுவதும் ஜனவரி 1-ம் தேதி ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024-ம் ஆண்டு நிறைவடைந்து 2025-ம் ஆண்டு பிறந்துள்ளது. புத்தாண்டு தினத்தை அடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொண்டாட்டங்கள் களைகட்டின. தலைநகர் டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக கட்டுப்பாடுகள் பலத்தப்படுத்தப்பட்டுள்ளன.