₹944 கோடி போதுமானதாக இருக்காது வேலூரில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி புயல் பாதிப்புக்கு மத்திய அரசு நிவாரணமாக

1 month ago 9

வேலூர், டிச. 7: புயல் பாதிப்புக்கு மத்திய அரசு நிவாரணமாக ₹944 கோடி வழங்கியது பெரிய விஷயம். இந்த தொகை போதுமானதாக இருக்காது என வேலுரில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின தெரிவித்தார். வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நேற்று வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மாவட்டங்களில் மேற்கொள்ளபடும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்து, பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதில் அமைச்சர்கள் துரைமுருகன், ஆர்.காந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், புயல் நிவாரணமாக முதலமைச்சர் ₹2,000 கோடி மத்திய அரசை கேட்டிருந்த நிலையில், ₹944.80 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதுவே பெரிய விஷயமாகும். இந்தத் தொகை போதுமானதாக இருக்காது. வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் சில பணிகள் சிறப்பாக செய்து வருகின்றனர். சில அரசு பணிகளில் தொய்வு ஏற்பட்டு இருக்கிறது. அதை சரி செய்ய சொல்லி இருக்கிறோம். பணிகள் முடிக்க வேண்டிய தேதி கேட்டு வாங்கி இருக்கிறோம்.

தமிழகத்தில் விளையாட்டுத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. விளையாட்டுகளில் பல விருதுகளை பெற்று வருகிறோம். மாவட்டந்தோறும் சிறந்த விளையாட்டு வீரர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு நூற்றுக்கு மேற்பட்ட விளையாட்டு வீரர்களுக்கு தேவையான உபகரணங்களை தமிழக அரசு வழங்கி வருகிறது. பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழக வீரர்கள் மாநிலங்களுக்கு சென்று விருதுகளை வாங்கியுள்ளனர். சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற ஃபிக்கி அமைப்பு, தமிழ்நாட்டில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு விருது வழங்கி கவுரவித்துள்ளது, என்றார்.

The post ₹944 கோடி போதுமானதாக இருக்காது வேலூரில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி புயல் பாதிப்புக்கு மத்திய அரசு நிவாரணமாக appeared first on Dinakaran.

Read Entire Article