
சென்னை அடுத்த ஆவடியைச் சேர்ந்த 13 வயது சிறுமி, 9-ம் வகுப்பு படித்து வந்தார். அவர், தனது பாட்டி வீட்டில் வசித்து வந்தார். அவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பொள்ளாச்சியை சேர்ந்த சூர்யா (19 வயது) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில் பொள்ளாச்சியில் இருந்து ஆவடி வந்த சூர்யா, பள்ளி மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துச்சென்று தாம்பரத்தில் உள்ள ஓட்டலில் அறை எடுத்து தங்கியதாகவும், அப்போது மாணவிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இது குறித்த புகாரின்பேரில் ஆவடி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமாரி வழக்குப்பதிவு செய்து சூர்யாவை கைது செய்து சிறையில் அடைத்தார்.