டெல்லி: 9 பெரிய நிறுவனங்களின் பங்குவிலை அடிப்படையிலான சந்தை மதிப்பு கடந்த வாரத்தில் ரூ.2,94,170.6 கோடி சரிந்துள்ளது. டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் சந்தை மதிப்பு கடந்த வாரத்தில் ரூ.1,10,351.67 கோடி சரிந்து ரூ.11,93,769.89 கோடியாக குறைந்தது. கடந்த வாரத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் சந்தை மதிப்பு ரூ.95,132.58 கோடி சரிந்து ரூ.16,30,245 கோடியாக குறைந்தது. இன்போசிஸ் சந்தை மதிப்பு ரூ.49,050 கோடி குறைந்து ரூ.6,03,178.45 கோடியாகச் சரிந்துள்ளது. பஜாஜ் பைனான்ஸ் சந்தை மதிப்பு ரூ.14,127 கோடியும், ஐசிஐசிஐ வங்கியின் சந்தை மதிப்பு ரூ.9504 கோடியும் குறைந்துள்ளன.
The post 9 பெரிய நிறுவனங்களின் பங்குவிலை அடிப்படையிலான சந்தை மதிப்பு கடந்த வாரத்தில் ரூ.2,94,170.6 கோடி சரிவு appeared first on Dinakaran.