9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்

1 month ago 14

வேதாரண்யம்: தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் உப்பு உற்பத்தியில் இரண்டாம் இடத்தில் உள்ளது. அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினவயல் போன்ற பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது. இன்னும் இரண்டு வாரத்தில் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் வேதாரண்யம் பகுதியில் வெயில் தாக்கம் தற்போது அதிகரித்து காணப்படுவதால் உப்பு உற்பத்தி அதிக அளவில் நடைபெறுகிறது. தற்போது ஒரு டன் உப்பு ரூ.1000 முதல் ரூ.1500 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மழைக்காலத்தில் உப்பின் விலை உயர வாய்ப்பு உள்ளது என உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

The post 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம் appeared first on Dinakaran.

Read Entire Article