8ம் ஆண்டு நினைவு நாள் ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி, ஓபிஎஸ் மரியாதை: டிடிவி.தினகரனும் மலரஞ்சலி

1 month ago 9

சென்னை: அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி காலமானார். அவரின் 8ம் ஆண்டு நினைவு நாளான நேற்று காலை 10 மணியளவில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அவருடன் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார், தமிழ்மகன் உசேன் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் மரியாதை செலுத்தினர். பின்னர் எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிட வளாகத்தில் திறந்த மேடை அமைத்து எடப்பாடி உறுதிமொழி படிக்க, மற்றவர்கள் திரும்ப சொல்லி ஏற்றுக் கொண்டனர்.

அதிமுக தலைவர்கள் அனைவரும் கறுப்பு சட்டை அணிந்து சமாதியில் மரியாதை செலுத்தினர். இதை தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நிர்வாகிகள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜெ.சி.டி.பிரபாகர், கு.ப.கிருஷ்ணன் மற்றும் பலர் ஜெயலலிதா சமாதிக்கு ஊர்வலமாக வந்து மலர்அஞ்சலி செலுத்தினர். ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவர்களை தொடர்ந்து, டி.டி.வி.தினகரனும் தங்களது ஆதரவாளர்களுடன் ஜெயலலிதா சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தினார்.

The post 8ம் ஆண்டு நினைவு நாள் ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி, ஓபிஎஸ் மரியாதை: டிடிவி.தினகரனும் மலரஞ்சலி appeared first on Dinakaran.

Read Entire Article