
சென்னை,
தமிழ் மொழியில் ரூ.30 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் 'ரெட் பிளவர்'. இந்த படத்தை இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கி வருகிறார். சயின் பிக்சன் ஆக்சன் கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தில் கதாநாயகனாக விக்னேஷ் நடித்துள்ளார். மனிஷா ஜஷ்னானி கதாநாயகியாக நடித்துள்ளார்.
மனீஷா மாடலிங் துறையில் இருந்து சினிமாவிற்கு வந்தவர். 'இருக்கு ஆனா இல்ல, வீர சிவாஜி, போங்கு' உள்ளிட்ட சில படங்களிலும், சில வெப் தொடர்களிலும் நடித்துள்ளார். 'போங்கு' படம் 2017ம் ஆண்டு வெளியானது. தற்போது 8 வருடங்களுக்கு பிறகு 'ரெட் பிளவர்' படத்தின் மூலம் திரைக்கு வருகிறார்.
இதில், நாசர், தலைவாசல் விஜய், ஜான் விஜய், ஒய்.ஜி. மகேந்திரன், லீலா சாம்சன், நிழல்கள் ரவி, டி.எம். கார்த்திக், சுரேஷ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்ரீ காளிகாம்பாள் பிச்சர்ஸ், தயாரிப்பாளர் கே. மாணிக்கம் இந்த படத்தை தயாரித்துள்ளார். படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், தற்போது இப்படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.