
மும்பை,
மராட்டிய மாநிலம் பன்வேல் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 37 வயதான மைதிலி துவா என்ற பெண் வசித்து வந்தார். அவருக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. மைதிலிக்கு 8 வயதில் இரு மகள் இருந்தார்.
இந்நிலையில், மைதிலி நேற்று காலை 8 மணியளவில் தனது மகளை அடுக்குமாடி குடியிருப்பின் 29-வது மாடியில் இருந்து தள்ளிவிட்டார். பின்னர் அவரும் கீழே குதித்தார். இதில் தாயும், மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மகளை மாடியில் இருந்து தள்ளி கொன்றுவிட்டு, தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.