8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த உறவுக்கார இளைஞன் - அதிர்ச்சி சம்பவம்

14 hours ago 2

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலம் சிம்டிகா மாவட்டம் ஜல்டிகா கிராமத்தை சேர்ந்த 8 வயது சிறுமியை அவரது உறவுக்கார இளைஞன் (வயது 20 ) மிட்டாய் வாங்கி தருவதாக கூறி திங்கட்கிழமை இரவு வீட்டில் இருந்து அழைத்து சென்றுள்ளான்.

மது போதையில் இருந்த அந்த இளைஞன் அருகில் உள்ள அங்கன்வாடி கட்டிடத்திற்கு சிறுமியை அழைத்து சென்றுள்ளான். அங்கு சிறுமியை அந்த இளைஞன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். பின்னர், சிறுமியை கொலை செய்ய முயற்சித்துள்ளான்.

ஆனால், அப்போது அவ்வழியாக சென்ற 2 பேர் சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைந்தனர். தனக்கு நடந்த சம்பவம் குறித்து சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் சிறுமையை பாலியல் வன்கொடுமை செய்த உறவுக்கார இளைஞனை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article