பெண் பொறியாளர்களுக்கு சென்னை மெட்ரோ நிறுவனத்தில் வேலை

10 hours ago 2

சென்னை,

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் பெண் பொறியாளர்கள் (சிவில்) உதவி மேலாளர் பணியிடங்களுக்கு வெளியாகியுள்ளது.இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், தொடக்கத்திலிருந்தே வேலைவாய்ப்பில் பாலின சமத்துவத்தை ஊக்குவிப்பதில் முக்கியத்துவம் அளித்து வருகிறது. சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் உள்ளமைப்பு பணியாளர்களில் 21 சதவீதம் பெண்களும், வெளி ஒப்பந்தத் பணியாளர்களில் 50 சதவீதம் பெண்களும் பணியாற்றி வருகின்றனர். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட மெட்ரோ ரெயில் நிலையங்களில் திருநங்கையரையும் பணியமர்த்தியுள்ளது.

தொழில்நுட்பத் துறையில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், தகுதியும் அனுபவமும் வாய்ந்த பெண் பொறியாளர்களுக்கான 8 உதவி மேலாளர் (சிவில்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பதவி: உதவி மேலாளர் (சிவில்)

பணியிடங்களின் எண்ணிக்கை: 8

குறைந்தபட்ச அனுபவம்: 2 வருடங்கள்

அதிகபட்ச வயது: 30 (தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்)

ஒருங்கிணைந்த ஊதியம்: மாதம் ரூ.62,000

விரிவான வேலைவாய்ப்பு அறிவிப்பு சென்னை மெட்ரோ ரயில் நிறுவத்தின் இணையதளத்தில் https://chennaimetrorail.org/job-notifications/ என்று 10-1-2025 அன்று அல்லது அதற்கு முன்னர் வெளியிடப்படும். தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு சம்பளம் பரிசீலனை செய்யப்படும். விண்ணப்பம் சமர்ப்பிக்கும் கடைசி தேதி 10-2-2025'' என அதில் கூறப்பட்டுள்ளது.

 

Read Entire Article