ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: வேட்பு மனு தாக்கல் நாளை தொடக்கம்

10 hours ago 2

ஈரோடு,

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் நலக்குறைவால் கடந்த மாதம் மரணம் அடைந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக தேர்தல் கமிஷனால் அறிவிக்கப்பட்டது.இந்த நிலையில் டெல்லி சட்டசபைக்கு நேற்று முன்தினம் பொதுத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்போடு ஈரோடு கிழக்கு மற்றும் உத்தரபிரதேச மாநிலம் மில்கிபூர் தொகுதி ஆகியவற்றுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தல் தேதியை இந்திய தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் அறிவித்தார்.

இதன்படி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந் தேதி (புதன்கிழமை) தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை (10-ந் தேதி) தொடங்குகிறது. 17-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. எனினும், பொங்கல் மற்றும் வார இறுதி நாட்கள் விடுமுறை நீங்கலாக 10 ஆம் தேதி, 13, மற்றும் 17 ஆகிய தேதிகளில் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலரான மணிஷ் கூறியதாவது: வேட்பாளருடன் 5 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். வேட்பாளர் வரும் போது மூன்று கார்களில் 200 மீட்டருக்கு அப்பாலும், ஒரு காரில் 100 மீட்டர் வரையும் அனுமதிக்கப்படுவர்" என்று கூறினார். நாளை முதல் வேட்பு மனு தாக்கல் நடைபெற உள்ளதால் ஈரோடு மாநகராட்சி அலுவலகம் போலீசார் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

Read Entire Article