கோவை,
கோவை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமை செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
கடந்த 15 நாட்களாக தி.மு.க வின் அமைச்சர்கள் என்னவெல்லாம் பேசினார்கள் என்று தெரியும். குறிப்பாக அண்ணா பல்கலை கழக விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் தி.மு.க வை சேர்ந்தவர் இல்லை என்று முதலில் சொன்னார்கள். ஆனால் தற்போது உண்மையை சொல்லி ஆக வேண்டிய கட்டாயத்தில் அவர் தி.மு.கவின் ஆதரவாளர் என்று முதல்-அமைச்சரே சொல்லிவிட்டார். திருப்பூரில் நடந்த கொலை சம்பவத்தில் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. எனவே சிபிஐ விசாரணை வேண்டும். டங்க்ஸ்டன் விவகரத்தில் ஒரு மூத்த அமைச்சரை அனுப்பி பேச வைத்து இருக்க வேண்டும். டங்க்ஸ்டன் விவகாரத்திற்கு முதல்-அமைச்சர் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
யுஜிசி குறித்து முதல்-அமைச்சர் உயர்கல்வி துறை செயலாளரிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.
பிப்ரவரி 5 -ம் தேதி வரை கருத்து சொல்ல அனுமதி இருக்கிறது. பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் செனட் உறுப்பினர்கள் மாநில அரசு சார்பில் இருக்கிறார்களே. இதை வேண்டுமென்றே திட்டமிட்டு அரசியல் செய்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை. சட்டசபையை பார்க்கும் போது வடிவேலுவின் 23-ம் புலிகேசி படத்தில் உள்ளது போல் முதல்-அமைச்சரை புகழ்வது தெரிகிறது. வடிவேலுவின் இடத்தை செல்வப்பெருந்தகை பிடித்துவிட்டார். பெரியார் விவகாரம் தொடர்பாக சீமானுக்கு ஆதரவான ஆதாரங்களை நாங்கள் தருகிறோம். பெரியார் ஒரு காலத்தில் பேசியதை தற்போது பேசினால் அருவருப்பு ஏற்படும். அவர் பேசியதை பொதுவெளியில் பேசினால் தவறாகிவிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.