'7ஜி ரெயின்போ காலனி 2' படத்தின் முதல் தோற்றம் வெளியானது

4 months ago 11

சென்னை,

இளைஞர்கள் கொண்டாடும் படங்களை இயக்குபவர் செல்வராகவன். 2004-ம் ஆண்டில் ரவி கிருஷ்ணா-சோனியா அகர்வால் நடிப்பில் இவர் இயக்கிய '7ஜி ரெயின்போ காலனி' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தில் இடம் பெற்ற 'கண்பேசும் வார்த்தைகள்' , 'கனா காணும் காலங்கள்' உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களை கவர்ந்தன.

19 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது '7ஜி ரெயின்போ காலனி' 2-ம் பாகத்துக்கான பட வேலைகள் தொடங்கி உள்ளன. முதல் பாகத்தை இயக்கிய செல்வராகவனே 2-ம் பாகத்தையும் இயக்குகிறார். முதல் பாகத்தில் நடித்த ரவி கிருஷ்ணா 2-ம் பாகத்திலும் நாயகனாக நடிக்கிறார்.

இந்நிலையில், புத்தாண்டை முன்னிட்டு இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டரை இயக்குனர் செல்வராகவன் வெளியிட்டுள்ளார். 19 ஆண்டுகளுக்கு பிறகு 7ஜி ரெயின்போ காலனி படத்தின் 2-ம் பாகம் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Here it is 7/G Rainbow colony 2 first look @thisisysr@AMRathnamOfl @ramji_ragebe1 pic.twitter.com/HB3CflZtsb

— selvaraghavan (@selvaraghavan) January 1, 2025
Read Entire Article