
லண்டன்,
சர்வதேச அளவில் ஆஸ்காருக்கு அடுத்து உயரிய விருதாக பிரிட்டிஷ் திரைப்பட அகாடமியின் 'பாப்டா' விருதுகள் கருதப்படுகின்றன. பாப்டா விருது பெறும் நடிகர்கள் ஆஸ்கார் விருதையும் பெறுவது உண்டு. ஒவ்வொரு ஆண்டும் பாப்டா விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் லண்டனில் 78-வது பாப்டா விருது வழங்கும் விழா நடந்தது. இதில் 'கான்க்லேவ்' சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.

'தி புருடலிஸ்ட்' படத்தை இயக்கிய பிராடி கோர்பெட் சிறந்த இயக்குனராகவும், அந்த படத்தில் நடித்த அட்ரியன் பிராடி சிறந்த நடிகராகவும் தேர்வு செய்யப்பட்டனர். சிறந்த நடிகை விருது 'எனோரா' படத்தில் நடித்த மிக்கி மேடினுக்கு வழங்கப்பட்டது.
'எ ரியல் பெய்ன்' படத்தில் நடித்த கீரன் கல்கின் சிறந்த துணை நடிகர் விருதையும், 'எமிலியா பெரெஸ்' படத்தில் நடித்த ஜோ சால்டனா சிறந்த துணை நடிகை விருதையும் பெற்றனர்.

ஏற்கனவே இம்மாதம் நடைபெற்ற கோல்டன் குளோப் விருது மற்றும் கிரிட்டிக் சாய்ஸ் விருதிலும் 'தி புருடலிஸ்ட்' படம் விருது வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.