76வது குடியரசு தினத்தை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

22 hours ago 1

சென்னை: நாடு முழுவதும் 76வது குடியரசு தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, இன்று காலை 8 மணிக்கு தேசியக்கொடி ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். பின்னர் குடியரசு தினத்தை ஒட்டி மூவர்ணக் கொடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து குடியரசு தினத்தை ஒட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருதுகளை வழங்கினார்.

* வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம் – தீயணைப்பு வீரர் வெற்றிவேல் (சென்னை)

* கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம் – அமீர் அம்சா (ராமநாதபுரம்)

* வேளாண் துறையின் சிறப்பு விருது – முருகவேல் (தேனி)

* காந்தியடிகள் காவலர் பதக்கம் – சின்ன காமணன் (விழுப்புரம்)

* சிறந்த காவல் நிலையத்திற்கான கோப்பைகள்:
முதல் இடம் – மதுரை
2வது இடம் திருப்பூர்
3வது இடம் – திருவள்ளூர்

இந்நிலையில் 76வது குடியரசு தின விழாவை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். “இந்த 76வது குடியரசு தினத்தில், அனைவருக்கும் நீதி, சமத்துவம் மற்றும் கண்ணியத்தை உறுதி செய்யும் நமது அரசியலமைப்பின் அடித்தளத்தை போற்றுவோம்.

இந்த நாள், முற்போக்கான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் இரக்கமுள்ள இந்தியாவை உருவாக்குவதற்கான நமது பகிரப்பட்ட கடமையை நமக்கு நினைவூட்டட்டும்.

அனைவருக்கும் நம்பிக்கையும் நோக்கமும் நிறைந்த குடியரசு தின வாழ்த்துக்கள்” என எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

The post 76வது குடியரசு தினத்தை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Read Entire Article