திருவள்ளூர்: தை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு வைத்திய வீரராகவப் பெருமாள் கோயிலில் கருட சேவை உற்சவம் நடைபெற்றது. திருவள்ளூரில் உள்ள ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோயிலில் தை பிரம்மோற்சவம் கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவில் உற்சவர் ஸ்ரீ வீரராகவர், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்து வருகிறார்.
அதன்படி முதல் நாளான 24ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு கொடியேற்றமும், காலை 7 மணிக்கு தங்க சப்பரம் புறப்பாடும், 11 மணிக்கு திருமஞ்ஜனமும், இரவு 7 மணிக்கு சிம்ம வாகன புறப்பாடும் நடைபெற்றது. 2ம் நாளான 25ம் தேதி காலை 7.30 மணிக்கு ஹம்சவாகன புறப்பாடும், இரவு 7 மணிக்கு சூர்ய பிரபை புறப்பாடும் நடைபெற்றது. இந்நிலையில் 3ம் நாளான நேற்று காலை 5 மணிக்கு கருட சேவையும் (கோபுர தரிசனம்), 7 மணிக்கு வீதி புறப்பாடும், மாலை 3 மணிக்கு திருமஞ்ஜனம், இரவு 8 மணிக்கு அனுமந்த வாகனம் புறப்பாடும் நடைபெற்றது. 4ம் நாளான இன்று காலை 7 மணிக்கு சேஷ வாகன புறப்பாடும், காலை 10 மணிக்கு திருமஞ்ஜனம், இரவு 7 மணிக்கு சந்திரப்ரபை புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
5ம் நாளான நாளை காலை 5 மணிக்கு நாச்சியார் திருக்கோலம் புறப்பாடும், 10 மணிக்கு திருமஞ்ஜனம், இரவு 7 மணிக்கு யாளி வாஹனம் புறப்பாடும் நடைபெறுகிறது. 6ம் நாளான 29ம் தேதி காலை 5 மணி முதல் 12 மணி வரை சூர்ணாபிஷேகம், மாலை 3.30 மணிக்கு வேணுகோபாலன் திருக்கோலம் வெள்ளி சப்பரம் புறப்பாடும், இரவு 8.30 மணிக்கு யானை வாகனம் புறப்பாடும் நடைபெறுகிறது.7ம் நாளான 30ம் தேதி காலை 5 மணிக்கு தேருக்கு எழுந்தருளுதலும், 7 மணிக்கு தேர் வீதி புறப்பாடு நிகழ்ச்சியும், மாலை 6.30 மணிக்கு தேரிலிருந்து எழுந்தருளி திருமஞ்ஜனமும், இரவு 9 மணிக்கு தேரிலிருந்து கோயிலுக்கு எழுந்தருதளும் நடைபெறுகிறது. 8ம் நாளான 31ம் தேதி மாலை 3.30 மணிக்கு திருப்பாதம்சாடி திருமஞ்ஜனமும், இரவு 7.30 மணிக்கு குதிரை வாகன புறப்பாடும் நடக்கிறது.
9ம் நாளான பிப்ரவரி 1ம் தேதி காலை 5 மணிக்கு ஆள்மேல் பல்லக்கு புறப்பாடும், 10 மணிக்கு திருமஞ்ஜனமும், 11 மணிக்கு தீர்த்தவாரியும் இரவு 7 மணிக்கு விஜயகோடி விமானம் புறப்பாடும், 8.30 மணிக்கு திருமொழி சாற்றுமுறை ரத்னாங்கி சேவையும் நடைபெறுகிறது.விழாவின் கடைசி நாளான பிப்ரவரி 2ம் தேதி காலை 9.30 மணிக்கு திருமஞ்ஜனமும், இரவு 7.30 மணிக்கு வெட்டிவேர் சப்பரமும் நடைபெறுகிறது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த தை பிரம்மோற்சவத்திற்கான ஏற்பாடுகளை கோயில் கவுரவ ஏஜென்ட் பி.என்.கே.ஸ்ரீ ரங்கநாதன், மக்கள் தொடர்பு அலுவலர் எஸ்.சம்பத் மற்றும் கோயில் அலுவலர்கள், பணியாளர்கள் செய்துள்ளனர்.
The post தை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு வைத்திய வீரராகவ பெருமாள் கோயிலில் கருட சேவை உற்சவம் appeared first on Dinakaran.