74 வயது பாட்டியை பலாத்காரம் செய்து கொன்ற பேரன்

1 week ago 2

தாரமங்கலம்: சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே சின்னப்பிள்ளையூரை சேர்ந்தவர் சின்னப்பிள்ளை(74). தனியாக வசித்து வந்த இவர் கடந்த 20ம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தாரமங்கலம் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இதில் அதே பகுதியை சேர்ந்த சின்னப்பிள்ளையின் மகள் வழி பேரன் பிரகாஷ் (31) மீது சந்தேகம் எழுந்தது. தாரமங்கலம் அருகே வேடப்பட்டி ரோட்டில் அவரை போலீசார் பிடித்து விசாரித்ததில் திடுக்கிடும் தகவல் வெளியானது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியிருப்பதாவது: சின்னப்பிள்ளையின் மகள் லட்சுமியின் மகன் பிரகாசுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

மனைவி பிரிந்து சென்றுவிட, தனியாக வசித்த பிரகாஷ், பாட்டி சின்னப்பிள்ளையிடம் பணம் வாங்கிச் சென்று சூதாடி வந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை சூதாடுவதற்கு பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்து கையால் தாக்கியதில் நிலைகுலைந்து விழுந்தவரின் கழுத்தை நெரித்துள்ளார். இதில் மயங்கிய சின்னப்பிள்ளையை பாட்டி என்றும் பாராமல் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டு தப்பினார். போலீசார் தேடுவதை அறிந்த பிரகாஷ், திருச்செந்தூர் கோயிலுக்கு சென்று மொட்டை அடித்து திரும்பியுள்ளார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, கொலை வழக்காக மாற்றிய போலீசார், பிரகாஷை கைது செய்து, சேலம் சிறையில் அடைத்தனர்.

 

The post 74 வயது பாட்டியை பலாத்காரம் செய்து கொன்ற பேரன் appeared first on Dinakaran.

Read Entire Article