
72-வது பிறந்தநாளை கொண்டாடும் தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அவர் "அண்ணா வழியில் அயராது உழைப்போம்; இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்." என்று முழங்கினார்.
துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், தொண்டர்கள் அதனை வழிமொழிந்து கோஷம் எழுப்பினர். அண்ணா, கருணாநிதி நினைவிடங்களைத் தொடர்ந்து சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில், தந்தை பெரியார் நினைவிடத்திலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து பிறந்த நாளை முன்னிட்டு கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் தாயார் தயாளு அம்மாவை சந்தித்து மு.க ஸ்டாலின் ஆசி பெற்றார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஸ்டாலின் "மாநிலத்தில் சுயாசி, இந்தி திணிப்பை தடுப்பது, இருமொழி கொள்கை தொடர்வது இதுதான் என் பிறந்த நாள் வாழ்த்து செய்தி" என்று கூறினார்.