
சிவகங்கை,
சிவகங்கையில் வீட்டுப்பாடம் செய்யாமல் பள்ளிக்கு வந்த 7-ம் வகுப்பு மாணவியை 400 முறை தோப்புக்கரணம் போட வைத்த அரசுப்பள்ளி ஆசிரியை சித்ராவிற்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் தொடர்ந்த வழக்கில், அபராத தொகையை ஆசிரியை சித்ராவிடம் இருந்து வசூலிக்கவும், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் தமிழ்நாடு அரசுக்கு மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் பரிந்துரைத்துள்ளார்.