ஐபிஎல்: பெங்களூரு - ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்

5 hours ago 3

பெங்களூரு,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்றிரவு (வியாழக்கிழமை) பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் 42-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு அணி இதுவரை 8 ஆட்டங்களில் ஆடி வெளியூரில் நடந்த 5 ஆட்டங்களிலும் வெற்றியையும், சொந்த மைதானத்தில் நடந்த 3 ஆட்டங்களிலும் தோல்வியையும் சந்தித்து புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது

ராஜஸ்தான் அணி இந்த சீசனில் வெகுவாக தடுமாறுகிறது. 8 ஆட்டங்களில் ஆடியுள்ள அந்த அணி 2 வெற்றி , 6 தோல்வி என புள்ளி பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Read Entire Article