68வது நினைவு நாளையொட்டி அம்பேத்கரின் சிலைக்கு மரியாதை

4 months ago 15

 

பட்டுக்கோட்டை, டிச. 9: டாக்டர்.அம்பேத்கரின் 68வது நினைவு நாளையொட்டி, பட்டுக்கோட்டையில் தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திமுக, அதிமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திராவிடர் கழகம், தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில், பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ அண்ணாதுரை, நகராட்சித் தலைவர் சண்முகப்பிரியாசெந்தில் குமார், நகர திமுக செயலாளர் செந்தில்குமார், திமுக தலைமை கழக பேச்சாளர் மணிமுத்து, வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் பார்த்திபன் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினர் பங்கேற்றனர்.

The post 68வது நினைவு நாளையொட்டி அம்பேத்கரின் சிலைக்கு மரியாதை appeared first on Dinakaran.

Read Entire Article