
சென்னை,
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC), குரூப்-2 மற்றும் 2 ஏ தேர்வின் மூலம் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 645 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், சார்பதிவாளர், வனவர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான குரூப்-2 மற்றும் 2 ஏ தேர்வு அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. மொத்தம் 645 பணியிடங்கள் குரூப்-2 மற்றும் 2 ஏ தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.
இந்த தேர்வுக்கு இன்று முதல் ஆகஸ்ட் 13 வரை டிஎன்பிஎஸ்சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 28-ந்தேதி இதற்கான முதல் நிலை தேர்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்து உள்ளது. கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்து அறிவிப்பு தொடர்பான முழு விபரங்களை தெரிந்துகொள்ளலாம்.