அதில் ஆர்வம் காட்டாததே இந்தியாவின் தோல்விக்கு காரணம் - தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் விமர்சனம்

8 hours ago 3

கேப்டவுன்,

இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி கடந்த 10-ந்தேதி லண்டன் லார்ட்சில் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் இரு அணிகளும் ஒரே மாதிரி 387 ரன்கள் எடுத்தன. 2-வது இன்னிங்சில் இங்கிலாந்து 192 ரன்னில் அடங்கியது. இதனால் இந்தியாவுக்கு 193 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை விளையாடிய இந்தியா 4-வது நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 58 ரன்கள் எடுத்திருந்தது. கே.எல். ராகுல் 33 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார். இந்த நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது.

தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி 2-வது இன்னிங்சில் 74.5 ஓவர்களில் 170 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து 22 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்தது. ஜடேஜா 61 ரன்களுடன் (181 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) கடைசி வரை களத்தில் இருந்தார். இங்கிலாந்து தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

இந்த போட்டியில் வெற்றிக்கு மிக அருகில் வந்து தோல்வியை சந்தித்த பல நாட்டின் முன்னாள் வீரர்கள் விமர்சித்து வருகின்றனர். அந்த வரிசையில் தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரரான கிப்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் இந்தியாவின் தோல்விக்கான காரணம் குறித்து விமர்சித்து பதிவிட்டுள்ளார்.

அதில், "இறுதியில் வெற்றிக்கு அருகில் வந்தும், ரன் குவிப்பில் ஆர்வம் காட்டாததே இந்திய அணியின் தோல்விக்கு காரணம்" என்று கிப்ஸ் பதிவிட்டுள்ளார்.

Read Entire Article