ரஞ்சி கோப்பையில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் விளையாடிய ரயில்வே அணி 241 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அடுத்து விளையாடிய டெல்லி அணி ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 41 ரன்கள் எடுத்தது. ரஞ்சி கோப்பையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் களமிறங்கிய விராட் கோஹ்லி 2வது நாளான நேற்று டெல்லிக்காக பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அவரது ஆட்டத்தை பார்க்க அரங்கில் ரசிகர்கள் குவிந்திருந்த நிலையில் 15 பந்துகளை சந்தித்து 6 ரன்னில் ஆட்டமிழந்தார். கோஹ்லி ஆட்டமிழந்ததும் ரசிர்கள் மைதானத்தை விட்டு வெளியேறினர்.
டெல்லி அணியில் கோஹ்லி மட்டுமே ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தவர். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் முதல் டெஸ்டில் சதம் விளாசிய பிறகு விராட் கோலி அடுத்து நடந்த 4 டெஸ்ட் போட்டியிலும் மிகவும் மோசமாக ஆடி அவுட்டானார். குறிப்பாக ஆப் சைட் செல்லும் பந்தில் அவர் அவுட்டானது பெரும் விமர்சனத்திற்கு ஆளானது. இந்நிலையில் இழந்த பார்மை மீட்பதற்காக விராட் கோலி ரஞ்சி கோப்பை போட்டிக்கு திரும்பினார். ஆனால் இங்கேயும் அவர் 6 ரன்னில் கிளீன் போல்டு ஆகி வெளியேறியதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
The post 6 ரன்னில் கோஹ்லி கிளீன் போல்டு appeared first on Dinakaran.