பாலக்காடு : மாணவர்கள் போதை பொருட்களுக்கு அடிமையாகி விடக்கூடாது. இவர்களை பெற்றோர்களும், ஆசிரியர்களும் கவனித்து கொள்ள வேண்டும் என கேரள முதல்வர் பிணராய் விஜயன் குறிப்பிட்டார். கேரளாவில், முதல்வர் பிணராயி விஜயன் நான்காவது ஆண்டு ஆட்சியை முன்னிட்டு பாலக்காடு அருகே காஸ்மோ பாலிட்டன் கிளப்பில் நேர்முக சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கேரள முதல்வர் பிணராய் விஜயன் பேசியதாவது: இந்த கூட்டத்தில் கேரள முதல்வர் பேசியதாவது: மாணவர்கள் போதை பொருட்களுக்கு அடிமையாகி விடக்கூடாது. இவர்களை பெற்றோர்களும், ஆசிரியர்களும் கவனித்து கொள்ள வேண்டும்.
அவர்களுக்கு போதைப்பொருட்களால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்து அடிக்கடி விழிப்புணர்வை ஆசிரியர்கள் ஏற்படுத்த வேண்டும். போதை பொருட்களுக்கு அடிமையாகி மாணவர்கள் கலவரங்கள் ஏற்படுத்துகின்றனர். போதை பொருட்கள் கடத்தல், விற்பனை செய்பவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட்டு வருகின்றனர்.
மாணவர்கள் தங்களது ஓய்வு நேரங்களில் உடற்பயிற்சியில் ஈடுபட செய்ய வேண்டும்.ஆதிவாசி மக்களுக்கு நிலப்பட்டாக்கள் வழங்கி வருகிறோம். ஆதிவாசிகளுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டது. வன விலங்குகளால் ஏற்படும் விபத்துகளுக்கு உடனடியாக நிவாரண தொகை வழங்கப்படுகிறது. வனங்களில் விலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் அமைத்து தண்ணீர் உட்காடுகளில் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்கப்பட்டது.
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் வழங்கப்பட்டது. விவசாயிகள் அறுவடை செய்கின்ற நெல்கள் அரசு தரப்பில் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு முதல்வர் பிணராய் விஜயன் பேசினார். கூட்டத்திற்கு மின்துறை அமைச்சர் கே.கிருஷ்ணன் குட்டி தலைமை வகித்தார்.
உள்ளாட்சி மற்றும் கலால்துறை அமைச்சர் ராஜேஷ், உணவு தானிய வழங்கல் துறை அமைச்சர் அனில், வனத்துறை அமைச்சர் சசீந்தரன், திட்ட வாரிய துணை சேர்மன் ராமசந்திரன், எம்.எல்.ஏக்கள் முகமது முஹசில், மம்மிக்குட்டி, பிரேம்குமார், வக்கீல் சாந்தகுமாரி, பிரபாகரன், சுமோத், பிரசேணன், பாபு, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பினுமோள், மாவட்ட கலெக்டர் பிரியங்கா, நில அளவை ஆணையர் டாக்டர். கவுசிகன் ஆகியோர் உட்பட அனைத்துத்துறை உயர் அதிகாரிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
The post போதைப்பொருட்களுக்கு மாணவர்கள் எப்போதும் அடிமையாகி விடக்கூடாது appeared first on Dinakaran.