கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், துணிக்கடைகள், நகைக்கடைகள், தொண்டு நிறுவனங்கள், கூட்டுறவுத்துறை சார்ந்த சங்கம் மற்றும் நிறுவனங்கள் உள்ளிட்ட அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் 10க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரியும் நிறுவனங்களில் புகார் அளிக்கும் வகையில் நான்கு பேர் கொண்ட உள்ளக புகார் குழு அமைக்க வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு தெரிவித்துள்ளார். அவ்வாறு அமைக்காத நிறுவனங்கள் மீது ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
The post 50 சதவீத பெண்கள் இடம்பெறும் வகையில் நான்கு பேர் கொண்ட உள்ளக புகார் குழு அமைக்க வேண்டும்: கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் appeared first on Dinakaran.