
சென்னை,
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 1-ந் தேதி 'ரெட்ரோ' திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தினை ஸ்டோன் பென்ஞ்சு மற்றும் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. காதல், ஆக்சன் கதையில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும், வசூலில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில், இப்படம் வெளியான 5 நாட்களில் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 5 நாட்களில் ரூ.104 கோடி வசூல் செய்துள்ள படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.