48வது சென்னை புத்தகக் காட்சி தொடங்கிய 10 நாட்களுக்குள் சுமார் 10 லட்சம் பேர் வருகை: பபாசி தகவல்

3 weeks ago 5

சென்னை: 48வது சென்னை புத்தகக் காட்சி தொடங்கிய 10 நாட்களுக்குள் சுமார் 10 லட்சம் பேர் வந்துள்ளதாக பபாசி தெரிவித்துள்ளது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் 48வது புத்தகக் காட்சி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜனவரி 12ம் தேதி வரை நடக்கிறது. மொத்தம் உள்ள 900 அரங்குகளில் அனைத்து வகையான புத்தகமும் விற்பனை செய்யப்படுகிறது.  குறிப்பாக 329, 330 என்ற எண்களில் அமைந்துள்ள தினகரன்- சூரியன் பதிப்பக ஸ்டால்களில் வரலாறு புத்தகம், மருத்துவம் சார்ந்த புத்தகம், கவிதை புத்தகம், சிறுகதை புத்தம் என பல்வேறு வகையான புத்தகம் விற்கப்படுகிறது.

புத்தகக் காட்சி தொடங்கிய 10 நாட்களுக்குள் சுமார் 10 லட்சம் பேர் வந்துள்ளனர் என பபாசி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பபாசி நிர்வாகி கூறியதாவது: சென்னை புத்தகக் காட்சிக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையால் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) மகிழ்ச்சியடைந்துள்ளது. இந்த ஆண்டு, புத்தகக் காட்சி தொடங்கிய 10 நாட்களுக்குள் சுமார் 10 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். இது கடந்த ஆண்டை விட அதிகமாகும்.

இனிவரும் நாட்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். குழந்தைகளுக்கான புத்தகங்களே அதிகளவில் விற்பனையாகின்றன. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை படிக்க வைக்க சிறப்பு ஆர்வம் காட்டுகின்றனர் மற்றும் பல்வேறு வயது பிரிவினர் புத்தகக் காட்சிக்கு வருகின்றனர். சங்க இலக்கியம் மற்றும் சமூக அக்கறையுள்ள நாவல்கள் பற்றிய புத்தகங்களும் வாசகர்களிடமிருந்து ஆதரவைப் பெறுகின்றன. இந்த புத்தகக் காட்சி ஜனவரி 12ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நிறைவடைகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post 48வது சென்னை புத்தகக் காட்சி தொடங்கிய 10 நாட்களுக்குள் சுமார் 10 லட்சம் பேர் வருகை: பபாசி தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article