சென்னை: பபாசி சார்பில் நடைபெற்று வரும் சென்னை புத்தகக் காட்சியில் கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருதை 6 பேருக்கு துணை முதல்வர் உதயநிதி வழங்கினார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் சென்னையில் புத்தகக் காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு ஆண்டுக்கான 48-வது சென்னை புத்தகக் காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் கடந்த டிச.2-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் 900-க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெற்றுள்ளன. இதற்கிடையே பபாசி சார்பில் ஆண்டுதோறும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரிலான பொற்கிழி விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டு பொற்கிழி விருதுகள் வழங்கும் விழா புத்தகக் காட்சி வளாகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.